தமிழகத்தில் 10,941 பேருக்கு கரோனா; சென்னையில் 3,347 பேர் பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10,941 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10,941 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 10,02,392 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 3,347 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Advertisement
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 44 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 13,157 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 6,172 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 9,14,119 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 75,116 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இன்று ஒரே நாளில் 1,09,533 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.