தமிழ்நாடு

அடிப்படை வசதிகள் கோரி கூடலூர் நகராட்சி அலுவலகம் முற்றுகை

DIN

தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி அலுவலகத்திற்குள் காஞ்சிமரத்துறை பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி பகுதியில் உள்ளது, காஞ்சிமரத்துறை. இங்கு பெரும்பாலான இடங்கள் விவசாய நிலமாக இருந்தாலும் 50 க்கும் மேலான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  பல ஆண்டுகளாக சாலை, குடிதண்ணீர், மின்சாரம் போன்ற வசதிகள் இப்பகுதியில் இல்லை. 

இது தொடர்பாக இப் பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தில் பல முறை மனு கொடுத்தனர். எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தியடைந்த இப்பகுதி பெண்கள் புதன்கிழமை நகராட்சி அலுவலகத்திற்குள் வந்தனர். அங்கு தரையில் அமர்ந்து, அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி எம்.பாண்டியம்மாள் தலைமையில் கோஷமிட்டனர்.  

இது தொடர்பாக நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம், காவல் ஆய்வாளர் ஜேம்ஸ் ஜெயராஜ் ஆகியோர் முற்றுகை போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக மின்சார தெருவிளக்குகள், குடிநீர் குழாய்கள், அமைத்தும், சாலை அமைக்க மதிப்பீடு தயார் செய்வதாகவும் உறுதி கூறினர். அதிகாரிகள் கூறியதைத்தொடர்ந்து, முற்றுகையை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

வாக்களித்த பிரபலங்கள்!

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

SCROLL FOR NEXT