முகப்பு
தமிழ்நாடு

திமுக சார்பில் பொதுமக்களுக்கு முகக்கவசம், கபசுர குடிநீர் வழங்கல்

கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகத்தினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
திமுக சார்பில் பொதுமக்களுக்கு முகக்கவசம், கபசுர குடிநீர் 
பகிர்:

கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகத்தினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அதேபோல் தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் பொது மக்களுக்கு முகக்கவசம், கபசுர குடிநீர், கிருமிநாசினி ஆகியவற்றை  வழங்கி வருகின்றனர். 

அதன் ஒருபகுதியாக ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில்  மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமையில் கொல்லம்பாளையம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் சுப்பிரமணியம்,பகுதி செயலாளர் லட்சுமணகுமார், மாவட்ட அவைத் தலைவர் குமார் முருகேசன் முன்னாள் யூனியன் சேர்மன் எல்லப்பாளையம் சிவக்குமார்   உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.