கரோனா: தலைமைச் செயலர் இன்று ஆலோசனை
தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று (ஏப்.22) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று (ஏப்.22) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை கொண்ட 11 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.
இதில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளால் கரோனா பரவல் குறைந்து வருகிறதா? அல்லது தொற்றைக் கட்டுப்படுத்த இன்னும் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
Advertisement
கரோனாவைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஏற்கெனவே கடந்த 16-ம் தேதி இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்றும் ஆலோசனை நடைபெறவுள்ளது.