முகப்பு
தமிழ்நாடு

ஜிப்மரில் ஏப். 26 முதல் வெளி நோயாளிகளுக்கான சிகிச்சை நிறுத்தம்

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் வரும் 26-ஆம் தேதி முதல் வெளி நோயாளிகளுக்கான சிகிச்சை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
கரோனா எதிரொலி: ஜிப்மரில் சிகிச்சை பெற முன்பதிவு செய்வது எப்படி?
பகிர்:

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் வரும் 26-ஆம் தேதி முதல் வெளி நோயாளிகளுக்கான சிகிச்சை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கு வெளிப்புற நோயாளிகளாக சிகிச்சை பெற வருவோருக்கு கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையிலும், கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், தவிர்க்க முடியாத காரணங்களால் வெளிப்புற நோயாளிகளுக்கு சிகச்சை அளிப்பது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதே வேளையில், அவசர சிகிச்சைகளுக்கு வரும் நோயாளிகள், மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். அவசர சிகிச்சைகளைத் தவிர அனைத்து விதமான சிகிச்சைகளும் நிறுத்தப்படுகிறது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.