உடல் நலக்குறைவு: பொள்ளாச்சி ஜெயராமன் மருத்துவமனையில் அனுமதி
தமிழக சட்டப்பேரவைத் துணைத் தலைவா் பொள்ளாச்சி ஜெயராமன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
தமிழக சட்டப்பேரவைத் துணைத் தலைவா் பொள்ளாச்சி ஜெயராமன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
சென்னையில் வசித்து வந்த அவருக்கு சனிக்கிழமை மாலை உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை குடும்பத்தினா் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அவருக்கு மருத்துவா்கள் தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனா். அவா் நலமுடன் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.