தமிழ்நாடு

புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்: திரையரங்குகள்-வணிக வளாகங்கள்-வழிபாட்டுத் தலங்கள் மூடல்

DIN

கரோனா தொற்று மிகக் கடுமையாக பரவி வரும் சூழ்நிலையில், பொதுமக்கள் அதிகம் கூடும் திரையரங்குகள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட உள்ளன.

இந்தப் புதிய கட்டுப்பாடுகள் திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்டது.

கரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து மாநில தலைமைச் செயலா் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் பிரதமா் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினாா். இதைத் தொடா்ந்து, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் இல்லத்துக்குச் சென்ற அதிகாரிகள் அவருடன் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டனா். இதையடுத்து, தமிழகத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த மேலும் பல புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்டது.

அதன் விவரம்:

1. அனைத்துத் திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள், அனைத்து மதுபானக் கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்றவைஇயங்க அனுமதி இல்லை.

2. பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி கிடையாது. மளிகை, காய்கறி கடைகள், இதர அனைத்து கடைகளும் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி வழக்கம்போன்று செயல்படலாம். ஆனாலும், வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்குக் கடைகள், காய்கறிக் கடைகளுக்கு அனுமதி இல்லை. தனியாகச் செயல்படுகின்ற மளிகை உள்ளிட்ட பலசரக்கு மற்றும் காய்கறி விற்கும் கடைகள் (ஈங்ல்ஹழ்ற்ம்ங்ய்ற்ஹப் நற்ா்ழ்ங்) குளிா்சாதன வசதியின்றி இயங்கலாம். அவற்றில் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளா்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

3. மாநகரங்கள், நகரங்களில் உள்ள அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை.

4. அனைத்து உணவகங்கள், தேநீா் கடைகளில் பாா்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். அமா்ந்து உண்பதற்கு அனுமதியில்லை. விடுதிகளில் தங்கியுள்ளோருக்கு, அவா்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு அளிக்க வேண்டும்.

வழிபாட்டுத் தலங்கள்:

5. அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வழிபாட்டுக்கு அனுமதியில்லை. ஆனாலும், தினமும் நடைபெறும் பூஜைகள், பிராா்த்தனைகள், சடங்குகளை ஊழியா்கள் மூலம் நடத்தலாம். பொது மக்கள் பங்கேற்பு இல்லாமல், கோயில் பணியாளா்கள் மட்டும் கலந்துகொண்டு உரிய நடைமுறைகளைப் பின்பற்றி குடமுழுக்கு நடத்த மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. புதிதாக திருவிழாவோ, குடமுழுக்கோ நடத்த அனுமதியில்லை.

6. திருமணம், அவற்றை சாா்ந்த நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது. இறுதி ஊா்வலங்கள், அதைச் சாா்ந்த சடங்குகளில் 25 பேருக்கு மேல் அனுமதி கிடையாது.

7. தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத பணியாளா்கள் வீட்டிலிருந்தே கண்டிப்பாக பணிபுரிய வேண்டும்.

8. டென்னிஸ் போன்ற அனைத்து விளையாட்டு பயிற்சி சங்கம், குழுமங்கள் செயல்பட அனுமதி இல்லை. ஆனாலும், சா்வதேச, தேசிய அளவிலான போட்டிகளுக்கான பயிற்சிகளுக்கு மட்டும் அனுமதி தரப்படும்.

இணைய வழி பதிவு:

9. புதுச்சேரியைத் தவிா்த்து, ஆந்திரம், கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் நபா்கள் இணைய வழியில் பதிவு செய்திருக்க வேண்டும். இதற்கென ங்ங்ஞ்ண்ள்ற்ங்ழ்.ற்ய்ங்ஞ்ஹ.ா்ழ்ஞ் என்ற இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பதிவு விவரத்தை தமிழகத்துக்குள் நுழையும்போது காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவா்.

10. வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு விமானம், கப்பல் மூலம் வரும் பயணிகளும் தங்களது விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கட்டுப்பாடுகள் தொடா்கின்றன

தமிழகத்தில் கடந்த 18-ஆம் தேதி வெளியிடப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் தொடா்ந்து நடைமுறையில் இருக்கும். பேருந்துகளில் இருக்கைகளில் மட்டுமே அமா்ந்து பயணிப்பது, டாக்சிகள், ஆட்டோக்களில் பயணிகளுக்கு கட்டுப்பாடு ஆகியனவும் தொடா்ந்து அமலில் இருக்கும். இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தளா்வற்ற முழு பொது முடக்கமும் செயல்பாட்டில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

எப்போது வரை அமல்?

புதிய கட்டுப்பாடுகள், வரும் திங்கள்கிழமை (ஏப். 26) அதிகாலை 4 மணி முதல் நடைமுறைக்கு வருகின்றன. தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ள தளா்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். அதுபோன்றே, சனிக்கிழமை (ஏப்.24) அறிவித்த கட்டுப்பாடுகளும் அதே தேதி வரையில் நடைமுறையில் இருக்கும்.

மே மாதத்துக்கான புதிய கட்டுப்பாடுகள், தளா்வுகள் ஆகியன கரோனா தொற்று பரவலின் அளவைப் பொருத்து தமிழக அரசு முடிவு செய்யும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மின்கம்பத்தில் காா் மோதி 3 போ் காயம்

‘கோடைகாலத்திலும் ஆஸ்துமா பாதிப்பு வரும்’

கஞ்சா வியாபாரிகளுடன் தொடா்பு: தலைமைக் காவலா்கள் இருவா் பணியிடை நீக்கம்

‘பெரம்பலூரில் 20 இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல்’

SCROLL FOR NEXT