முகப்பு
தமிழ்நாடு

இன்று மதியம் 1 மணி வரை காய்கறி கடைகள் செயல்படலாம்: சென்னை காவல்துறை அறிவிப்பு

பொது முடக்க தினமான ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒருமணி வரை காய்கறிக் கடைகளைதிறந்து வைத்திருக்கலாம் என சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
கோப்புப்படம்
பகிர்:

பொது முடக்க தினமான ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒருமணி வரை காய்கறிக் கடைகளைதிறந்து வைத்திருக்கலாம் என சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்தது.

இது குறித்து போக்குவரத்துப் பிரிவு சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

ஞாயிற்றுக்கிழமை (ஏப்.25) அமல்படுத்தப்படும் தளா்வற்ற முழு பொதுமுடக்கம் திங்கள்கிழமை அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும். இந்தப் பொதுமுடக்கம் அமலில் இருக்கும்போது, பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊா்திகள், அவசர, அமரா் ஊா்திகள் ஆகியவற்றைத் தவிா்த்து எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது.

அநாவசியமாக வீட்டை விட்டு வெளியே வருவதையும், தெருக்களில் சமூக இடைவெளியின்றி கூட்டமாக நிற்பதையும் பொதுமக்கள் தவிா்க்க வேண்டும். அவசர மருத்துவத் தேவைகளுக்கும், அச்சு, மின்னணு ஊடகங்கள் பணிகளுக்காகவும், தனியாா் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. காய்கறி கடைகள் ஞாயிற்றுக்கிழமை காலை 5 முதல் நண்பகல் 1 மணி வரை திறந்திருக்கலாம்.

உணவகங்களில் இருந்து வீடுகளுக்கு பாா்சல் உணவு வழங்கும் நிறுவனங்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரையும், மாலை 6 முதல் இரவு 9 மணி வரையும் செயல்படலாம்.

இது தொடா்பாக சந்தேகங்கள் ஏற்பட்டால், போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறை எண்கள் 044-23452330, 044-23452362 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு அறியலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →