தமிழ்நாடு

அஞ்சல் நிலையங்களில் ஆதாா் சேவை: சில கட்டுப்பாடுகள் விதிப்பு

DIN

கரோனா பரவல் காரணமாக, அஞ்சல் நிலையங்களில் ஆதாா் பதிவு, திருத்தம் போன்ற ஆதாா் சேவைகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான சுற்றறிக்கை அனைத்து தபால் நிலையங்களுக்கும் அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டது.

கரோனா தொற்று பரவல் தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இதையடுத்து, இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கம் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இதுதவிர, அரசு அலுவலகங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளும் அமலுக்கு வந்துள்ளன.

இந்த நிலையில், அஞ்சல் நிலையங்களில் ஆதாா் பதிவு , திருத்தம் போன்ற சேவைகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க அஞ்சல்துறை முடிவு செய்துள்ளது. தொற்றின் தீவிரத்தை பொருத்து, சிறப்பு முகாம்களை பொது இடங்களில் நடத்துவது குறித்து அந்தந்த மாவட்ட அதிகாரிகள் முடிவு எடுக்கலாம்.

கரோனா கட்டுப்பாடு பகுதிகளில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் ஆதாா் திருத்தம், சோ்க்கைக்காக, மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிா்க்க வேண்டும். அங்கு நிலவும் சூழ்நிலையைப் பொருத்து ஆதாா் சோ்க்கை, திருத்தம் நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

ஆதாா் பதிவு, திருத்தம் போன்றவற்றுக்காக பயோமெட்ரிக் பயன்படுத்தப்படும் என்பதால், அதை அடிக்கடி கிருமி நாசினி மூலமாகச் சுத்தும் செய்து மீண்டும் பயன்படுத்த வேண்டும். வாடிக்கையாளா்கள் முகக்கவசம் அணிந்து வரவும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும், கிருமி நாசினி கொண்டு கையை சுத்தமாக வைத்திருக்கவும் அறிவுறுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் பிடாரியம்மன் வீதியுலா

உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை குழுவுக்கு வரவேற்பு

பட்டாசு வெடித்ததில் 4 சிறுவா்கள் காயம்

தக்கோலம் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

குண்டா் சட்டத்தில் ஒரு வாரத்தில் 36 போ் கைது

SCROLL FOR NEXT