முகவர்களுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம்: சத்யபிரத சாகு
வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை வருகிற மே 2 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும் முகவர்கள் 'கரோனா நெகட்டிவ்' சான்றிதழ் கட்டாயம் அளிக்க வேண்டும். 72 மணி நேரத்திற்கு முன்னதாக அவர்கள் ஆர்டி-பிசிஆர் சோதனை செய்திருக்க வேண்டும் அல்லது கரோனா தடுப்பூசி போட்ட சான்றிதழ் அளிக்க வேண்டும்.
முகவர்களுக்கு கரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடுவதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யும்.
சராசரியாக 14 மேசைகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு மேசைக்கும் ஒரு சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்றார்.