தமிழ்நாடு

சிவன்மலை அருகே சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து

DIN

காங்கயம் அடுத்துள்ள சிவன்மலை அருகே பாரம் ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து, விபத்துக்குள்ளானது.

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் பகுதியிலிருந்து நூல் பண்டல் பாரம் ஏற்றிக் கொண்டு காங்கயம் வழியாக திருப்பூர் நோக்கி சரக்கு வேன் (ஈச்சர்) ஒன்று சென்றுகொண்டிருந்தது. வேனை ஓட்டுநர் ஸ்டாலின் ஒட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில், திங்கள்கிழமை காலை 11  மணியளவில், காங்கயம் அடுத்துள்ள சிவன்மலைஅருகே திருப்பூர் சாலையில் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக இந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், வேனுக்கு உள்ளே இருந்த ஓட்டுநர் ஸ்டாலின் மற்றும் உடனிருந்த 2 பேர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினர். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வேனுக்குள் காயமடைந்த நிலையிலிருந்த மூவரையும் மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

 பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, சாலையில் கவிழ்ந்து கிடந்த வேனை மீட்டு, சாலையின் ஓரமாக நிறுத்தினர். இந்த விபத்தின் காரணமாக திருப்பூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருவிழாவில் கோஷ்டி மோதல்: 10 பேருக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் நீதிபதி, ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT