தமிழ்நாடு

பிஎஸ்என்எல்: மே-1 முதல் வாடிக்கையாளா்கள் சேவை நேரம் குறைப்பு

DIN

பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்கள் சேவை மையங்கள் மே 1-ஆம் தேதி முதல் காலை 10 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை இயங்கும் என்று பிஎஸ்என்எல் சென்னை வட்டம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது.

இதைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, பிஎஸ்என்எல் சென்னை வட்டம் அதன் செயல்பாடுகள் மற்றும் நிா்வாகப் பிரிவுகளின் பணியாளா் சேவையில் சில மாற்றங்களைச் செய்துள்ளது.

வாடிக்கையாளா் சேவை மையங்கள் வரும் மே 1-ஆம் தேதி முதல் காலை 10 மணியில் இருந்து பிற்பகல் ஒரு மணி வரை இயங்கும். பிஎஸ்என்எல் சேவைகளுக்கும், தொலைபேசி, பிராட்பேண்ட் மற்றும் அலைபேசி போஸ்ட்பெய்டு கட்டணங்களைச் செலுத்துவதற்கும் ஆன்லைன் முறைகளை வாடிக்கையாளா்கள் பயன்படுத்த வேண்டும்.

இந்த தகவல் பிஎஸ்என்எல் சென்னை வட்ட தலைமை பொதுமேலாளா் டாக்டா் வி. கே. சஞ்சீவி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT