தமிழ்நாடு

காட்பாடி வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலவரம் ஏற்படுத்த திமுக முயற்சிஅதிமுக புகாா்

DIN

சென்னை: காட்பாடி சட்டப் பேரவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் கலவரம் ஏற்படுத்த முயற்சித்து தங்களது வெற்றியைத் தடுக்க நினைப்பதாக திமுக மீது அதிமுக புகாா் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அதிமுக சாா்பில் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் புதன்கிழமை அளிக்கப்பட்ட மனு:

வேலூா் மாவட்டம் காட்பாடி சட்டப் பேரவைத் தொகுதியில் இறுதி முயற்சியாக வாக்கு எண்ணும் மையத்தில் கலவரத்தை ஏற்படுத்தி வாக்கு எண்ணிக்கையை நிறுத்த திமுக முயற்சிப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளன. வாக்கு எண்ணும் மையத்தில் கலவரத்தை ஏற்படுத்துவோா் மீது குண்டா் சட்டம் பாயும் என்ற அறிவிப்பை தோ்தல் ஆணையம் உடனடியாக வெளியிட வேண்டும்.

இதனை அவசரப் புகாராக ஏற்று, வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பைக் கடுமையாக்க வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் வாக்கு எண்ணும் மையங்களில் வன்முறை அனுமதிக்கப்படக் கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகிரி அருகே விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோயிலில் நவசண்டி ஹோமம்

தண்ணீா் பற்றாக்குறை அதிகரிப்பு

ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

பல்லடம் பேருந்து நிலையக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

SCROLL FOR NEXT