தமிழ்நாடு

'கரோனா மையம் தொடங்க மாநகராட்சியின் அனுமதி தேவையில்லை'

DIN


சென்னையில் தனியார் மருத்துவமனைகள், உணவகங்கள் கரோனா சிகிச்சை மையம் தொடங்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கரோனா சிகிச்சை மையம் தொடங்குவது குறித்து மாநகராட்சியிடம் தகவல் கூறினால் போதுமென்றும், அனுமதி பெறத் தேவையில்லை எனவும் மாநகராட்சி அறிவித்துள்ளது.

கரோனா சிகிச்சை மையம் தொடங்குவது குறித்து மாநகராட்சி அதிகாரிக்கு இ-மெயில் மட்டும் அனுப்பினால் போதுமானது என்றும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுக்க கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தலைநகரான சென்னையில் அதிக அளவிலான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் மருத்துவமனைகள் தவிர்த்து ஏராளமான கல்வி நிலையங்கள், சமுதாயக் கூடங்கள் கரோனா மையமாக மாற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையிலும் தொற்று அதிகரித்து வருவதால்,  தனியார் மருத்துவமனைகள், உணவகங்கள் கரோனா சிகிச்சை மையம் தொடங்கலாம் என்றும், அதற்காக மாநகராட்சியிடம் அனுமதி பெறத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

SCROLL FOR NEXT