கரோனா பரிசோதனை மையத்திற்குள் புகுந்த பாம்பு 
தமிழ்நாடு

கரோனா பரிசோதனை மையத்திற்குள் புகுந்த பாம்பு: பணியாளர்கள் அலறியடித்து ஓட்டம் 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள கரோனா பரிசோதனை மையத்திற்குள் பாம்பு புகுந்ததால் பணியாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

DIN


உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள கரோனா பரிசோதனை மையத்திற்குள் பாம்பு புகுந்ததால் பணியாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் நகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்து வரப்படுகிறது. இந்த நிலையில் மையத்துக்குள் சுமார் 5 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு புகுந்தது. இதனைக்கண்ட பணியாளர்கள் அலறியடித்து ஓடினர். இதனைத் தொடர்ந்து 2 மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு பாம்பை பிடித்து காட்டுபகுதிக்குள் விட்டனர்.

இந்த மருத்துவமனைக்கு தினமும் 100க்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் நிலையில் அனைவருக்கும் பதட்டத்தை ஏற்படுத்தியது. எனவே இரவு நேரத்தில் இது போன்ற சம்பவங்கள் நடந்தால் என்ன பண்ணுவது என்று அச்சப்பட்டனர். மேலும், இரவு நேரங்களில் மருத்துவமனைக்கு அரசு காவலர்கள் நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேகமோ அவள்... பிரியங்கா மோகன்!

பங்குச் சந்தைகள் இரண்டாவது நாளாக உயர்வுடன் நிறைவு!

ரீல்ஸ் மோகம்: தண்டவாளத்தில் நின்றபடி விடியோ எடுத்த சிறார்கள் வந்தே பாரத் ரயில் மோதி பலி!

விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாதது வருத்தமளிக்கிறது! - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

முதல் டெஸ்ட்: மூவர் சதம் விளாசல்; இந்தியா 286 ரன்கள் முன்னிலை!

SCROLL FOR NEXT