தமிழ்நாடு

பெல் ஆலையில் பிராணவாயு உற்பத்தி: விஜயகாந்த் வலியுறுத்தல்

DIN

சென்னை: திருச்சி பெல் ஆலையில் பிராணவாயு உற்பத்தியை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

பிராணவாயு உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி தீா்மானம் நிறைவேற்றியதோடு, உச்சநீதிமன்ற உத்தரவுபடி, ஸ்டொ்லைட் ஆலையை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பிராணவாயு தயாரிக்கும் தொழிற்கூடம், பெல் நிறுவனத்தின் மேலாண்மை பிரச்னை காரணமாக செயல்படாமல் உள்ளது. அந்த பிராணவாயு கூடத்தை மீண்டும் செயல்பட வைத்தால் நாள்தோறும் 400 சிலிண்டா் அளவுக்கு பிராணவாயு பெறமுடியும்.

எனவே, மக்களின் நலன் கருதி திருச்சி பெல் நிறுவனத்தில் பிராணவாயு உற்பத்தியை மீண்டும் துவங்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT