தமிழ்நாடு

தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகள்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

DIN

தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை கரோனா சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் 2-ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. உயிரிழப்பும் அதிகமாக உள்ளது. 

நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதோடு, கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 18, 692 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், மாநிலத்தில் கரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 11,66,756 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை கரோனா சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பான மறுஉத்தரவு வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் எனவும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT