முகப்பு
தமிழ்நாடு

ஊத்தங்கரை அருகே கார் - பைக் மோதல்: ஒருவர் பலி, வாகனங்கள் எரிந்து சேதம்

ஊத்தங்கரை அருகே காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
ஊத்தங்கரை அருகே கார் - பைக் மோதல்
பகிர்:

ஊத்தங்கரை அருகே காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தீரன் சின்னமலை பள்ளி எதிரில் பெங்களூரிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் மீது எதிரே வந்த ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் கார் வேகமாக மோதியதில் பெங்களூரிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த பெயர் ஊர் தெரியாத நபர்கள் 2 பேர் காயம் அடைந்ததில் ஒருவர் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

மற்றொருவர் பலத்த காயத்துடன் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து ஊத்தங்கரை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். கார் மற்றும் இருசக்கர வாகனம் இரண்டும் தீயில் கருகியது.

முழு கட்டுரையைப் படிக்க →