தமிழக அரசுக்கு வணிகர் சங்கம் வைக்கும் கேள்வியும், கோரிக்கையும் 
தமிழ்நாடு

தமிழக அரசுக்கு வணிகர் சங்கம் வைக்கும் கேள்வியும் கோரிக்கையும்

தமிழகத்தில் அனைத்துக் கடைகளும் 50 சதவிகித வாடிக்கையாளர்களோடு வணிகம் நடத்திட அரசு அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

DIN


தமிழகத்தில் அனைத்துக் கடைகளும் 50 சதவிகித வாடிக்கையாளர்களோடு வணிகம் நடத்திட அரசு அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் 3000 சதுர அடிக்கு மேல் உள்ள கடைகள் திறக்கக் கூடாது என்பது உள்ளிட்ட முக்கிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு, மதுபான கடைகளில் கூட்ட நெரிசலில் மக்கள் மதுபானங்களை வாங்கும்போது ஏற்படாத கரோனா தொற்று, அத்தியாவசிய பொருள்களை வாங்கும் போது ஏற்படுகின்றது என்பது ஏற்படையது அல்ல. அரசின் இச்செயல் ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைப்பதாக உள்ளது.

எந்த அடிப்படையில் 3000 சதுர அடிக்கு மேல் உள்ள கடைகள் மூடப்பட வேண்டும் என்பதற்கு உரிய காரணங்கள் ஏதும் இல்லை. மாறாக பெரிய கடைகள் மூடப்பட்டால், சிறிய கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படும் என்ற அடிப்படை உண்மையைக் கூட அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவில்லை.

இஸ்லாமியர்களின் பண்டிகைக் காலமும், திருமண விழாக்களும் நடைபெறும் காலம் என்பதால், அனைத்துக் கடைகளும் 50 சதவீத வாடிக்கையாளர்களோடு வணிகத்தை தொடர்ந்திட அரசு அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இல்லையேல், அரசே அத்தியாவசியப் பொருள்களுக்கான விநியோகத்தை பொறுப்பேற்றுக் கொள்ளும் பட்சத்தில் மே 1-ஆம் தேதியிலிருந்து மே 15 வரை தொடர் கடையடைப்பு நடத்தி, கரோனா தொற்று ஒழித்திட வணிகர்கள் தங்கள் பங்கிளிப்பை அளிக்கத் தயாராக இருக்கிறார்கள் என்று பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் பயணிகள் கனிவான கவனத்திற்கு..! அக். 1 முதல் ஐஆர்சிடிசி ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!

மேட்டூர் அணை நீர்வரத்து: இன்றைய நிலவரம்!

சென்னையில் விடிய, விடிய பெய்த கனமழை! மயிலாப்பூரில் 80 மி.மீ. மழை பதிவு!

ஃபிடே செஸ்: தமிழக வீராங்கனைக்கு முதல்வா் வாழ்த்து

அண்ணா பிறந்த நாள்: எடப்பாடி பழனிசாமி தலைமையில் மரியாதை

SCROLL FOR NEXT