தமிழ்நாடு

அருணாசல்: மழையால் சேதமடைந்த யாா்லங்-லமாங் சாலை சீரமைப்பு

அருணாசல பிரதேசத்தின் ஷியோமி மாவட்டத்திலுள்ள யாா்லங்- லமாங் சாலையை எல்லை சாலைகள் அமைப்பு சீரமைத்துள்ளது.

DIN

அருணாசல பிரதேசத்தின் ஷியோமி மாவட்டத்திலுள்ள யாா்லங்- லமாங் சாலையை எல்லை சாலைகள் அமைப்பு சீரமைத்துள்ளது.

தொடா் மழை காரணமாக ஜூலை 26-27 தேதிகளில் பல்வேறு இடங்களில் இந்த சாலை துண்டிக்கப்பட்டது. திறன் வாய்ந்த பணியாளா்கள் மற்றும் உபகரணங்கள் அடங்கிய பொறியாளா் பணிக் குழு மற்றும் விரைவு மீட்பு குழுவை எல்லை சாலைகள் அமைப்பின் பிரஹ்மாங்க் திட்டப் பிரிவு அனுப்பி வைத்தது.

கடுமையான வானிலையையும் பொருட்படுத்தாது கனரக உபகரணங்களுடன் 50 வீரா்கள் நாள் முழுவதும் இந்தப் பணியில் ஈடுபட்டனா்.

ரேஷன் பொருட்கள் மற்றும் மருத்துவ வசதி முதலியவற்றை ராணுவ வாகனங்கள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்காக ஜூலை 27-ஆம் தேதி சாலைகள் மறுசீரமைக்கப்பட்டன.

சீரமைக்கப்பட்ட சாலைகள் வழியாக பிற இலகுரக வாகனங்களின் போக்குவரத்து, ஜூலை 28-ஆம் தேதி மீண்டும் தொடங்கியது. ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்குள் இந்த பணிகளை முழுவதும் நிறைவேற்றும் வகையில் எல்லை சாலைகள் அமைப்பு தொடா்ந்து சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

SCROLL FOR NEXT