உசிலம்பட்டியில் நகராட்சி சார்பில் துண்டு நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு 
தமிழ்நாடு

உசிலம்பட்டியில் நகராட்சி சார்பில் துண்டு நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு

உசிலம்பட்டியில் கரோனா 3 ஆம் அலை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நகராட்சி சார்பில் துண்டு நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

DIN

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கரோனா 3 ஆம் அலை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நகராட்சி சார்பில் துண்டு நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் கரோனா 3 ஆம் அலை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்துப் பகுதிகளிலும் சுகாதாரத் துறை சார்பில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது . மேலும், முகக்கவசம் அணிவது உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி சார்பில் கரோனா 3 ஆம் அலை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக உசிலம்பட்டி பேருந்து நிலையம் , தேனிரோடு , காய்கனி சந்தை , பூ சந்தை , உள்ளிட்ட முக்கிய வீதிகளில் நகராட்சி ஆணையாளர் ரத்தினவேல் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் அகமது கபீர் , சரவணபிரபு உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் பொதுமக்களிடம் கரோனா குறித்து துண்டு நோட்டிஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர் . மேலும், ஆட்டோக்கள், பேருந்துகளில் பயணித்த பயணிகளுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது . கரோனா 3ஆம் அலை தடுப்பு நடவடிக்கைகளில் நகராட்சி அதிகாரிகள் தீவிரம் காட்டியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT