முகப்பு
தமிழ்நாடு

பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் அனுமதி ரத்து: பக்தர்கள் ஏமாற்றம்

பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் 3 நாள்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைத்துள்ளனர். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் 3 நாள்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைத்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் நள்ளிரவில் வெளியிட்ட அறிவிப்பின் குளறுபடியால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பவானி அம்மன் ஆலயத்தில் 14 வாரங்கள் ஆடி மாதத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். கரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஆடி திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி முற்றிலுமாக மறுக்கப்பட்டது. இந்த ஆண்டு கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்திருப்பதால் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் பொதுமக்கள் கூடும் இடங்களை மூடுவது குறித்து முடிவு எடுத்துக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்தது.

நேற்று நள்ளிரவில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் ஆகஸ்ட் மாதம் 1, 2, 3 ஆகிய மூன்று நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிப்பை வெளியிட்டது. நள்ளிரவில் அறிவிப்பு வெளியிடப்பட்டது பொது மக்களுக்கு முழுமையாக சென்று சேராமல் பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் மூன்றாம் வார ஆடித்திருவிழா இன்று நடைபெறும் நிலையில் காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு குவிந்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.

கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் ஆற்றங்கரை ஓரத்தில் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டு மொட்டை அடித்தல், வேப்பஞ்சேலை என தங்களது வேண்டுதல்களை பக்தர்கள் நிறைவேற்றிச் செல்கின்றனர். மாவட்ட நிர்வாகம் தெளிவான அறிவிப்பை முன்கூட்டியே அறிவித்திருந்தால் பக்தர்கள் இதுபோன்று வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை இருக்காது என்று தெரிவிக்கின்றனர்.

பக்தர்கள் கோயிலுக்குள் மட்டுமே அனுமதிக்கப்படாத நிலையில் பெரியபாளையம் வழக்கமான மக்கள் கூட்டத்தில் நிரம்பி வழிகிறது. இனிவரும் காலங்களில் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்கூட்டியே அறிவிப்புகளே வெளியிட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →