தமிழ்நாடு

முன்னாள் முதல்வர் கருணாநிதி திருவுருவப் படத்தை திறந்து வைத்தார் ராம்நாத் கோவிந்த்

DIN


தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி திருவுருவப் படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். 

தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்று கருணாநிதி படத்தை அவர் திறந்து வைத்தார்.

முன்னதாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுடன் சட்டப்பேரவை நூற்றாண்டு விழா தொடங்கியது.  இதில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வரவேற்புரையாற்றினார். அப்போது சட்டப்பேரவையில் மு.கருணாநிதி ஆற்றிய செயல்கள்குறித்து விவரித்தார்.

பின்னர் குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தகங்கத்தை நினைவுப் பரிசாக வழங்கினார். அதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார். 

பேரவை மண்டபத்தில் நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததும், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட மிக முக்கிய விருந்தினா்கள் தேநீா் அருந்தும் வகையில் வசந்த மண்டபத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

SCROLL FOR NEXT