சட்டப்பேரவை உரையின்போது பன்வாரிலால் புரோஹித் 
தமிழ்நாடு

சட்டப்பேரவைகளில் தமிழகம் முதன்மையானது: ஆளுநர்

நாட்டில் உள்ள சட்டப்பேரவைகளில் தமிழகம் முதன்மையானது என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம் சூட்டினார்.

DIN

நாட்டில் உள்ள சட்டப்பேரவைகளில் தமிழகம் முதன்மையானது என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம் சூட்டினார்.

தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி திருவுருவப் படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

பின்னர் உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இந்தியாவில் உள்ள சட்டப்பேரவைகளில் தமிழகம் முதன்மையானது என்று கூறினார். 

அதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது, இந்திய அரசியல்வாதிகளில் குறிப்பிடத்தகுந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. மண்ணின் மைந்தனின் படத்தை சட்டப்பேரவையில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

70 ஆண்டுகால அரசியல் வாழ்வில் அனைத்து அரசியல்வாதிகளுடனும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் கருணாநிதி.

பல்வேறு துறைகளில் தனித்துவம் மிக்க அறிவுடன் திகழ்ந்தவர் அவர். தீண்டாமையை ஒழிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டவர். வீடுகள் கட்டிக்கொடுத்து சமத்துவபுரத்தை உருவாக்கினார்.

குடிசைகளுக்கு பதிலாக குடியிருப்புகள் கட்டிக்கொடுத்தார். இந்தியாவில் முன்னேறிய மாநிலங்களில் தமிழகம் முடன்னிலை இடம் வகிக்கிறது என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முன்னாள் போட்டியாளர்கள்!

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

SCROLL FOR NEXT