தீரன் சின்னமலை நினைவு நாள்: எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை
தீரன் சின்னமலையின் 216வது நினைவு நாளையொட்டி அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீரன் சின்னமலையின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஈரோடு: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 216வது நினைவு நாளையொட்டி அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீரன் சின்னமலையின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 216 வது நினைவு நாள் ஆடிப்பெருக்கு விழா அரச்சலூர் அடுத்த ஓடாநிலையில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரச்சலூர் அடுத்த ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலையின் மணிமண்டபத்தில் உள்ள தீரன் சின்னமலையின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன், தங்கமணி, கே வி ராமலிங்கம், பி.சி. இராமசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயகுமார், பண்ணாரி முன்னாள் எம்எல்ஏக்கள் பாலகிருஷ்ணன். கிட்டுசாமி. தென்னரசு. சிவசுப்பிரமணி முன்னாள் எம்பி செல்லகுமார சின்னையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.