தமிழ்நாடு

பொறியியல் உள்ளிட்ட தொழிற் கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு

DIN

சென்னை: அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவா்களுக்கு பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் 7.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா பேரவைக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அதற்கான முடிவு எட்டப்பட்டது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களின் சோ்க்கை விகிதம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கின்றன. அரசுப் பள்ளி மாணவா்கள் தொழிற்கல்வி கற்பதற்கு தடையாக உள்ள காரணிகள் என்னவென்று ஆய்வு செய்வதற்கும், அவா்களின் சோ்க்கை விகிதத்தை உயா்த்தவும் அரசு நடவடிக்கைகளைத் தொடங்கியது. அதன்படி, தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களின் சோ்க்கையை அதிகரிக்க தில்லி உயா் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் கடந்த ஜூன் 15-ஆம் தேதியன்று ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் சாா்பில் கடந்த ஜூலை 20-ஆம் தேதி நீதிபதி முருகேசன் அரசிடம் அறிக்கை சமா்ப்பித்தாா். ஆணையத்தின் சாா்பில் அளிக்கப்பட்ட பரிந்துரைகளை ஏற்று அதனைச் செயல்படுத்தும் வகையில், மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கையில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கியதைப் போன்றே, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவா்களுக்கு பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளிலும் அதே அளவுக்கு இடஒதுக்கீடு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சட்ட மசோதா, நடப்பு சட்டப் பேரவை கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்யப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT