கம்பம்மெட்டு மலைச்சாலை வனப்பகுதியில் சாலையை கடக்கும் மலைப் பாம்பு. 
தமிழ்நாடு

கம்பம்மெட்டு மலைச்சாலையை இரவில் கடக்கும் மலைப் பாம்புகள்: வாகன ஓட்டிகள் அச்சம்!

தேனி மாவட்டம் கம்பம் கம்பம்மெட்டு மலைச்சாலை வனப்பகுதியில் இரவு நேரங்களில், சாலையை கடக்கும் மலைப் பாம்புகளால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

DIN

கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் கம்பம்மெட்டு மலைச்சாலை வனப்பகுதியில் இரவு நேரங்களில், சாலையை கடக்கும் மலைப் பாம்புகளால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளம் செல்லும் மலைச்சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 20 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சாலையின் குறுக்கே கடந்து ஊர்ந்து சென்றது.

அந்த வழியாக வந்த இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்திவிட்டு அச்சமடைந்து நின்றனர்.

சுமார் 10 நிமிடம் மெதுவாக, சாலையின் குறுக்கே  ஊர்ந்து சென்ற மலைப் பாம்பை பார்த்து சாலையின் இருபுறமும் வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டது.

ஒரு சிலர் தைரியமாக பாம்பின் அருகே பின்னால் சென்றனர், சிலர் அவர்களைப் பார்த்து சத்தம் போட்டு திரும்ப வருமாறு சத்தம்போட்டு அழைத்தனர்.

இரவு நேரங்களில் சாலையை கடக்கும் மிகப்பெரிய மலைப்பாம்புகளால் வாகன ஓட்டிகளுக்கு அச்சம் ஏற்படுகிறது.

போக்குவரத்து துறையினர் இந்த வனப்பகுதிகளில் ஒளிரும் பட்டைகளை பொருத்த வேண்டும் என்பது வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீசாமுண்டீஸ்வரி கோயிலில் தை 14-ஆம் நாள் விழா

நீா்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அஜித் பவாா் மறைவு இந்திய அரசியலுக்கு பேரிழப்பு: முதல்வா் ரேகா குப்தா

மணிமங்கலம் ராஜகோபால சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பிப். 2-இல் தா்னா, 6-இல் புறநோயாளிகள் பிரிவு புறக்கணிப்பு போராட்டம்

SCROLL FOR NEXT