தமிழ்நாடு

கம்பம் பகுதி கோயில்களில் அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள கோயில்களை இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினார்.

இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, கம்பம் தம்பிரான் மாட்டுத்தொழு, சுருளிவேலப்பர் மற்றும் கம்பராயப்பெருமாள் காசிவிசுவநாத சுவாமி கோயில்களில் ஆய்வு நடத்தினார். ஆய்வின்போது கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் என்.ராமகிருஷ்ணன் உடன் இருந்தார், சுருளி வேலப்பர் கோயிலில் அறநிலையத்துறைக்கு கோயில் நிர்வாகிகள் ஒத்துழைப்பது இல்லை என்று எம்எல்ஏ புகார் செய்தார்.

மேலும் கம்பராயப்பெருமாள் கோயிலில், கோட்டையைச்சுற்றி குடியிருப்போர் சங்கத் தலைவர் ரா.சுருளி, இணை ஆணையரிடம் கொடுத்த மனுவில், வாடகையைக் குறைக்க வேண்டும், குடியிருப்போர் பெயரில் ரசீது வழங்க வேண்டும் என்று 131 பேர்கள் கையெழுத்திட்ட மனு கொடுத்தார். பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பி. ஈஸ்வரன், பழனிக்குமார், சென்றாயப்பெருமாள் ஆகியோர் கொடுத்த மனுவில், கும்பாபிசேகம், தேர்த்திருவிழா நடத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.

மேலும் இணை ஆணையர் கூறும்போது, கோயில் நிர்வாக அலுவலர் அலுவலகம் அன்னதான சத்திரத்தில் உள்ளது, விரைவில் வேறு இடத்தில் அலுவலகம் அமைக்கப்படும் என்றார். ஆய்வின்போது திமுக நகர பொறுப்பாளர்கள் துரை.நெப்போலியன், ஆர்.கே.செல்வக்குமார் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT