மக்களைத் தேடி மருத்துவ திட்டத்திற்கான வாகனங்களை கொடியசைத்து வைத்து தொடங்கி வைத்த வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி.  
தமிழ்நாடு

உசிலம்பட்டி அருகே  ‘மக்களைத் தேடி மருத்துவம்’:  வணிக வரித்துறை அமைச்சர் தொடங்கி வைப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எம்.கல்லுப்பட்டி  ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தை  வணிகவரித் துறை அமைச்சர்  வியாழக்கிழமை தொடங்கி வைத்தார் .

DIN


உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எம்.கல்லுப்பட்டி  ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தை  வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார் .

தமிழகத்தில் தோற்றா நோயாளிகளுக்கு வீடு தேடி மருந்துகள் வழங்கும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . முதல் கட்டமாக கோவை , சென்னை , சேலம் ,  தஞ்சாவூர் , திருச்சி , திருநெல்வேலி ஆகிய 7 மவட்டங்களில் இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

மதுரை மாவட்டம் எம். கல்லுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற மக்களைத் தேடி மருத்துவ திட்டத்திற்கான வாகனங்களை  தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். பின்னர், வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து வைத்து தொடங்கி வைத்தார் .

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேசன், மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பூமிநாதன்,  ஆட்சியர் அணிஸ் சேகர், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, மருத்துவ இணை இயக்குநர் வெங்கடாசலம்,  வட்டார மருத்துவ அலுவலர் விசுவநாதன், உசிலம்பட்டி  வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், பேரையூர் வட்டாட்சியர் ரவிச்சந்திரன், மற்றும் மருத்துவ அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர் . இதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்துகள் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT