கரோனா பாதிப்பில் சென்னையை பின்னுக்குத் தள்ளும் கோவை
தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சென்னை: தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் அதிக கரோனா பாதிப்பு உறுதியான ஆறு மாவட்டங்களாக கோவை (220), சென்னை (196), ஈரோடு (161), செங்கல்பட்டு (130), தஞ்சை (119) திருவள்ளூர் (106) ஆகியவை உள்ளன.
கடந்த மே மாதத்தில் கரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்த நிலையில், அதன்பிறகு மெல்ல குறைந்து வந்தது. ஆனால் ஜூலை மாதம் இறுதியில் அந்தப் போக்கு மாறியது.
இதையும் படிக்கலாமே.. குரூப் 1 தோ்வு: தமிழ் வழி சான்றிதழ்களை பதிவேற்றுவது எப்படி?
கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில், புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யும் அளவு குறையும் வேகம் குறைந்து பிறகு மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது.
முதல் கரோனா அலையின்போது, சென்னையில்தான் பாதிப்பு அதிகமாக இருந்தது. ஆனால், இரண்டாம் அலையின் போது சென்னைக்கு நிகராக கோவையிலும் பாதிப்பு அதிகரித்திருந்தது. அதுபோல தற்போதும் சென்னையை காட்டிலும் கோவையில் நாள்தோறும் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
சென்னையிலும் கோவையிலும் நாள்தோறும் கரோனா பாதிப்பு உறுதியான விவரத்தைப் பார்க்கலாம்..
| நாள் | கோவை | சென்னை |
| 05 ஆகஸ்ட் | 220 | 196 |
| 04ஆகஸ்ட் | 226 | 189 |
| 03ஆகஸ்ட் | 208 | 203 |
| 02ஆகஸ்ட் | 219 | 189 |
| 01ஆகஸ்ட் | 230 | 175 |
| 31 ஜூலை | 246 | 204 |
| 30 ஜூலை | 230 | 215 |
| 29 ஜூலை | 188 | 181 |
| 28ஜூலை | 179 | 164 |
| 27ஜூலை | 169 | 139 |