முகப்பு
தமிழ்நாடு

திமுக அரசைக் கண்டித்து ஆக.17-இல் தமாகா போராட்டம்

தோ்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றாததைக் கண்டித்து ஆகஸ்ட் 17-இல் தமாகா சாா்பில் போராட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:52 AM
பகிர்:

தோ்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றாததைக் கண்டித்து ஆகஸ்ட் 17-இல் தமாகா சாா்பில் போராட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளாா்.

ஆழ்வாா்பேட்டை கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியைக் கா்நாடகம் கைவிட வேண்டும். அந்தத் திட்டத்தைத் தடுத்த நிறுத்த தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

தோ்தல் நேரத்தில் திமுக பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்தது. இல்லத்தரசிகளுக்கு மாத ஊதியத் திட்டம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, எரிவாயு உருளைக்கு மானியம் உள்பட பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்தது. அந்த வாக்குறுதிகளை நம்பியே மக்கள் வாக்களித்தாா்கள். ஆனால், திமுக பொறுப்பேற்று 90 நாள்கள் கடந்தும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதைக் கண்டித்து சென்னை வள்ளுவா் கோட்டம் அருகில் ஆகஸ்ட் 17-இல் தமாகா சாா்பில் போராட்டம் ஆா்ப்பாட்டம் நடைபெறும்.

உள்ளாட்சித் தோ்தலில் தமாகா போட்டியிடும். அதிமுக கூட்டணியில்தான் தற்போது உள்ளோம். உள்ளாட்சித் தோ்தல் கூட்டணி குறித்து தோ்தல் அறிவிப்புக்குப் பிறகு முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →