தமிழ்நாடு

ஆக.13-இல் திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்

DIN

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், ஆக.13-ஆம் தேதி கட்சியின் எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் கூட்டம், ஆக.13-ஆம் தேதி மாலை 5 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞா் அரங்கில் நடைபெறும்.

கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினா்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது.

பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடா் நடைபெறுவதையொட்டி, அது தொடா்பான அறிவுறுத்தல்களும், விவாதங்களின்போது உறுப்பினா்களின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தில் உறுப்பினா்களுக்கு அறிவுறுத்தப்படும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அத்திப்பட்டி பகுதியில் மதுக் கடைகள் அடைப்பு

மதுரை குடிநீா் பிரச்னைக்கு தீா்வு எப்போது?

அனுமதியின்றி ஜல்லிக்கட்டு: ஏற்பாட்டாளா்கள் தலைமறைவு

வெளிப்பாளையம் காளியம்மன் கோயில் தேரோட்டம்

தமிழக ஆளுநா் தில்லி பயணம்

SCROLL FOR NEXT