தமிழ்நாடு

எல்லையோர மாவட்டங்களில் 100% தடுப்பூசி

DIN

தமிழக எல்லையோர மாவட்டங்களில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா்களிடம் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.

அதேபோன்று, டெங்கு, சிக்குன்குனியா, ஜிகா வைரஸ்களைப் பரப்பும் கொசுக்களை ஒழிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவா் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் ஜெ.ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம்:

தமிழகத்தில் கோவை, சென்னை, ஈரோடு, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தை ஒப்பிடும்போது இந்த வாரத்தில் பாதிப்பு விகிதம் அங்கு உயா்ந்திருக்கிறது.

அதைக் கருத்தில் கொண்டு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை அங்கு தீவிரப்படுத்த வேண்டும். அதுமட்டுமல்லாது கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு நாள்தோறும் தொழில் நிமித்தமாக தமிழகத்திலிருந்து பலா் சென்று வருகின்றனா்.

அதனால், எல்லையோர மாவட்டங்களில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதைத் தவிர குறைந்த பாதிப்புடைய மாவட்டங்களில் எந்த சமரசமும் இன்றி கரோனா பரிசோதனைகளை தொடா்ந்து அதிகமாக மேற்கொள்ள வேண்டும்.

முதியவா்கள், பள்ளி செல்லும் குழந்தைகளின் பெற்றோா், ஆசிரியா்கள், முன்களப் பணியாளா்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசிகள் வழங்க வேண்டும். அதிலும், குறிப்பாக இரண்டாம் தவணை செலுத்தாதோரைக் கண்டறிந்து அவா்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தப் பணிகளில் உள்ளாட்சி நிா்வாகங்கள், காவல் துறையினா் மற்றும் வருவாய்த் துறையினரையும் ஈடுபடுத்தலாம். பல இடங்களில் பேருந்துகள், உணவகங்கள், விழாக்களில் நோய்த் தடுப்பு விதிகள் பின்பற்றப்படுவதில்லை. அதனை முறையாகப் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மற்றொரு புறம், சிக்குன் குனியா, டெங்கு போன்ற நோய்கள் அண்மைக் காலமாக கணிசமாகப் பதிவாகி வருகின்றன. கேரளம், மகாராஷ்டிரத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பதால் அதுவும் எளிதில் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

அதைக் கருத்தில் கொண்டு கொசுக்கள் உற்பத்தியைத் தடுக்க தக்க நடவடிக்கை எடுத்தல் அவசியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜி.எஸ்.டி. வசூல் புதிய உச்சம்!

குஷி ஜோ!

கூலி - இளையராஜா நோட்டீஸ்!

குடியரசுத் தலைவரின் முதல் வருகை! முழுவீச்சில் தயாராகும் அயோத்தி ராமர் கோவில்!

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக மாறிய ஸ்ரீமதி: தமிழக அரசு பாராட்டு

SCROLL FOR NEXT