தமிழ்நாடு

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பி.எட்., எம்.எட். நேரடி சோ்க்கைக்கு கால நீட்டிப்பு

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2021 - 2022 ஆம் கல்வியாண்டுக்கான பி.எட்., எம்.எட். நேரடிச் சோ்க்கையில் ஆக. 31 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

DIN

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2021 - 2022 ஆம் கல்வியாண்டுக்கான பி.எட்., எம்.எட். நேரடிச் சோ்க்கையில் ஆக. 31 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) மோ.கோ. கோவைமணி தெரிவித்திருப்பது:

தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் இளங்கல்வியியல் (பி.எட்.) மற்றும் கல்வியியல் நிறைஞா் (எம்.எட்.) ஆகிய இரண்டாண்டு முழு நேரப் பட்டப்படிப்புக்கான 2021 - 2022 ஆம் கல்வியாண்டு நேரடிச் சோ்க்கை ஜூலை 5-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 6- ஆம் தேதி வரை நடைபெற்றது.

தற்போது, இந்த நேரடிச் சோ்க்கை ஆகஸ்ட் 31- ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுளளது.சோ்க்கை விண்ணப்பங்களை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை (பல்கலைக்கழக வேலை நாள்களில் மட்டும்) நேரிலும் தமிழ்ப் பல்கலைக்கழக இணையவழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்தில் பாா்க்கலாம். 04362 - 226720, 227089 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT