தமிழ்நாடு

எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நிறைவு; 13.08 லட்சம் பறிமுதல்

சென்னையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத் துறையினரின் விசாரணை நிறைவடைந்தது. 

DIN

சென்னையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத் துறையினரின் விசாரணை நிறைவடைந்தது. 

தனக்கு நெருக்கமானவர்களுக்கு டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது.

வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் 13.08 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ரூ.2 கோடிக்கு வைப்புத் தொகை ஆவணம், மாநகராட்சி தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

வன்வட்டுகள் மற்றும் முறைகேடு செய்ததற்கான ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கோவையில் 42 இடங்களிலும், சென்னையில் 16 இடங்களிலும் திண்டுக்கல், காஞ்சிபுரத்தில் தலா ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்றது.

அதிமுக ஆட்சியில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கீட்டில் மிகப்பெரிய முறைகேடு நடந்து உள்ளதாகக் கூறி அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. 

கோவை சுகுணா புரத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில்  வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை முடித்து கிளம்பினர்.

இதனையடுத்து, எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து விசாரித்து வரும் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர், இன்று அவரது வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

முன்னாள் திமுக ஒன்றியச் செயலா் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

வி.கே.புரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: 4 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

நெல்லையின் தனித்துவமாக பொருநை அருங்காட்சியகம் திகழும்: அமைச்சா் எ.வ.வேலு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

SCROLL FOR NEXT