முகப்பு
தமிழ்நாடு

ரெய்டு மூலம் வேலுமணியை அச்சுறுத்தலாம், என்னை ஒன்றும் செய்ய முடியாதா? மாஃபா பாண்டியராஜன் விளக்கம்

ரெய்டு மூலம் வேலுமணி போன்றவர்களை அச்சுறுத்தலாம் என்னை ஒன்றும் செய்ய முடியாது என தான் பேசியதாக பரப்பப்பட்டு வரும் தகவலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மறுத்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:53 AM
கோப்புப்படம்
பகிர்:


ரெய்டு மூலம் வேலுமணி போன்றவர்களை அச்சுறுத்தலாம் என்னை ஒன்றும் செய்ய முடியாது என தான் பேசியதாக பரப்பப்பட்டு வரும் தகவலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மறுத்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் இல்லம் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் செவ்வாய்க்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். எஸ்.பி. வேலுமணியிடம் நடத்தப்பட்ட விசாரணையும் நிறைவடைந்தது.

இதையும் படிக்கஎஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நிறைவு; 13.08 லட்சம் பறிமுதல்

இந்த நிலையில், "வேலுமணி போன்றவர்களை இந்த அரசு ரெய்டு நடத்தி அச்சுறுத்த முடியும், என்னை ஒன்றும் செய்ய முடியாது" என்ற தகவலை முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியதாக ட்விட்டரில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. அந்தப் பதிவில் மாஃபா பாண்டியராஜன் ட்விட்டர் கணக்கும் டேக் செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால், "இதுபோன்ற தகவல் எதையும் நான் கூறவே இல்லை, தயவு செய்து தவறான செய்திகளைப் பரப்புவதைத் தவிர்க்கவும்" என்று மாஃபா பாண்டியராஜன் அந்தப் பதிவின் கீழே விளக்கமளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.