சென்னையில் வேலுமணியுடன் தொடர்புடைய 15 இடங்களில் சோதனை 
தமிழ்நாடு

சென்னையில் வேலுமணியுடன் தொடர்புடைய 15 இடங்களில் சோதனை

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமானவர்களின் வீடு உள்பட தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.

DIN

சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் கோவையில் உள்ள வீடு உள்பட அவருக்குச் சொந்தமான மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு உள்பட தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.

சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதியில் தங்கியிருக்கும் எஸ்.பி. வேலுமணியிடமும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் எம்எல்ஏ விடுதி இருக்கும் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

எஸ் பி வேலுமணி நண்பர் சந்திரபிரகாஷ் ரங்கராஜபுரம் பிரதான சாலையில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் சோதனை

பல்வேறு அரசு ஒப்பந்தங்கள் மூலம் முறைகேடு செய்த புகாரின் கீழ் எஸ்.பி. வேலுமணி மீது சொத்துக் குவிப்பு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எஸ்.பி. வேலுமணியின் கோவை குனியமுத்தூரில் உள்ள வீடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் 15 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேளச்சேரயில் உள்ள வேலுமணியின் உறவினர் சந்திரசேகர் வீடு, கோடம்பாக்கம் ரெங்கராஜபுரத்தில் கேசிபி இன்ப்ரா லிமிடட் நிறுவனம் உள்ளிட்டவற்றிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

எஸ் பி வேலுமணி நண்பர் சந்திரபிரகாஷ் ரங்கராஜபுரம் பிரதான சாலையில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் சோதனை

மேலும், ஒப்பந்த முறைகேடு தொடர்பாக சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் நந்தகுமார் வீட்டிலும், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நமது அம்மா நாளிதழ் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அடுக்குமாடி குடியிருப்பில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை! 

வேலுமணியின் நெருங்கிய நண்பர் சந்திரசேகர் நமது அம்மா நாளிதழில் வெளியீட்டாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோடம்பாக்கத்தில் வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர் வீடு, மாதவரத்தில் உள்ள பால் பண்ணை பேங்க் காலனியில் உள்ள கட்டுமான நிறுவனத்திலும் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப்பை சந்திக்கும் பிரதமர் மோடி! அடுத்த மாதம் அமெரிக்கா பயணம்!

அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமித்தவா் மீது நடவடிக்கை : கோட்டாட்சியரிடம் மனு

திருவள்ளூா்: 10.43 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

SCROLL FOR NEXT