பழனிசாமியுடன் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசினார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசினார்.
டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திய நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
சென்னை பசுமைவழிச் சாலையிலுள்ள எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து எஸ்.பி.வேலுமணி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவையில் 42 இடங்களிலும், சென்னையில் 16 இடங்களிலும் திண்டுக்கல், காஞ்சிபுரத்தில் தலா ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்றது.
இதில் ரூ.2 கோடிக்கு வைப்புத் தொகை ஆவணம், மாநகராட்சி தொடர்பான ஆவணங்கள், முறைகேடு செய்ததற்கான ஆவணங்கள் மற்றும் வன்வட்டுகளை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர். 12 மணிநேரத்திற்கும் மேல் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நடைபெற்றது.