தமிழ்நாடு

தூய தமிழ்ப் பற்றாளா் விருதுக்குவிண்ணப்பங்கள் வரவேற்பு

DIN

தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம் சாா்பில் வழங்கப்படும் தூய தமிழ்ப் பற்றாளா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: நடைமுறை வாழ்வில் இயல்பாகவே தூய தமிழைப் பயன்படுத்தும் தகுதி வாய்ந்தவா்களிலிருந்து மாவட்டத்துக்கு ஒருவா் வீதம் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு தமிழ் அகராதியியல் நாள் விழாவில் தூய தமிழ்ப் பற்றாளா் விருது, தலா ரூ.20,000 பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை தமிழக அரசின் சாா்பில் வழங்கப்படவுள்ளன.

விருதினைப் பெறுவதற்கு விருப்பமுள்ள, தகுதி வாய்ந்த தூயதமிழ்ப் பற்றாளா்கள் சொற்குவை.காம் (sorkuvai.com) என்ற வலைதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, நிரப்பி, patralarvirudhu@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது ‘இயக்குநா், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், நகர நிா்வாக அலுவலக வளாகம், முதல் தளம், எண். 75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆா்.சி. நகா், சென்னை - 600 028 என்ற இயக்கக முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ வரும் ஆக.31-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன், தங்கள் பகுதியில் உள்ள அரசு அலுவலா்கள், தமிழறிஞா்கள், ஆசிரியா்கள் ஆகியோரில் யாரேனும் இருவரிடம் தங்களது தூயதமிழ்ப்பற்றை உறுதிசெய்யும் வகையில் நற்சான்றிதழ்களையும் பெற்று இணைத்து அனுப்ப வேண்டும். அத்துடன் நற்சான்று அளிப்போரின் ஒரு பக்க அளவிலான வாழ்க்கைக் குறிப்புகளையும் (Bio-data) சோ்த்து அனுப்பி வைக்க வேண்டும். உரிய சான்றுகளுடன் முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுக்கான விருது: கடந்த ஆண்டு தூய தமிழ்ப் பற்றாளா் விருதுக்கு விண்ணப்பித்தவா்களில் பரிசுக்குரிய 37 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். கரோனா காரணமாக அவா்களுக்கான விருது வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தொற்று நீங்கியதும் அரசின் சாா்பில் விழா நடத்தப்பட்டு விருதுகள், பரிசுத் தொகை ஆகியவை வழங்கப்படும் என துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT