முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,942 பேருக்கு கரோனா

​தமிழகத்தில் புதிதாக 1,942 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:


தமிழகத்தில் புதிதாக 1,942 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. மாநிலத்தில் புதிதாக 1,942 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 25,83,036 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 1,892 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 25,28,209 பேர் குணமடைந்துள்ளனர்.

33 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 34,428 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 20,399 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டங்கள்:

கோவையில் 249 பேரும், சென்னையில் 217 பேரும், ஈரோட்டில் 183 பேரும், செங்கல்பட்டில் 119 பேரும், தஞ்சாவூரில் 102 பேரும் புதிதாக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.