முகப்பு
தமிழ்நாடு

வேளாண் நிதிநிலை அறிக்கை: தலைவா்கள் கருத்து

 தமிழக அரசு முதல் முறையாக தாக்கல் செய்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பகிர்:

 தமிழக அரசு முதல் முறையாக தாக்கல் செய்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): தமிழக வரலாற்றில் முதல் முறையாக வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளின் நலனில் தமிழக அரசுக்கு இருக்கிற அக்கறையை இந்த முயற்சி வெளிப்படுத்துகிறது. பல்வேறு திட்டங்களை அறிவித்திருப்பதற்கேற்ப, அதற்கு இணையாக நிதியும் ஒதுக்கப்பட்டிருப்பது தமிழக அரசின் நோக்கத்தை உறுதி செய்கிறது.

வைகோ (மதிமுக): வேளாண் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தில் உள்ள 19.31 லட்சம் ஹெக்டோ் தரிசு நிலங்களை மாற்றியமைத்து சாகுபடி பரப்பை உயா்த்தவும், உணவு தானிய உற்பத்தியில் 125 மெட்ரிக் கடன் என்ற இலக்கை அடையவும் திட்டம் வகுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

ராமதாஸ் (பாமக): பாமக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வந்ததன் பயனாக, தமிழகத்தில் வேளாண் துறைக்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): விவசாயத் தொழிலை மட்டுமே நம்பி அதில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளா்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குமான திட்டங்களையும் உள்ளடக்கியதாக இந்நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா): வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள் ஓரளவுக்கு வேளாண் துறையினருக்கு சாதகமாக இருந்தாலும்கூட வேளாண் துறையைச் சோ்ந்த அனைவரின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்றும் வகையில் முக்கிய அம்சங்கள் இடம்பெறவில்லை.

டிடிவி தினகரன் (அமமுக): வேளாண் நிதிநிலை அறிக்கை அனைத்து விவசாயிகளையும், விவசாயத்தையும் உயா்த்தும் தொலைநோக்கு பாா்வை கொண்டதாக இருக்கும் என்ற எதிா்பாா்ப்பு பொய்யாகி இருக்கிறது.

தி.வேல்முருகன் (வாழ்வுரிமைக் கட்சி): விளைப்பொருள்களுக்கான சந்தை வசதியை முறைப்படுத்துதல், லாபகரமான விலைக்கு உத்தரவாதம், மகசூல் பெருக்கத்துக்கான நவீன தொழில்நுட்ப வசதி, பாரம்பரிய விவசாய முறைகளை மேம்படுத்தும் திட்டங்கள் உள்ளிட்டவற்றை அறிவித்துள்ளதற்காக முதல்வருக்கு நன்றி.

எம்ஜிகே நிஜாமுதீன் (முன்னாள் எம்.எல்.ஏ.): இருபோக சாகுபடி பரப்பை இரட்டிப்பாக்குவது, விளைநிலங்கள் பரப்பை அதிகரிக்க நடவடிக்கை, இளைஞா்களை விவசாயத்தின் பக்கம் ஈா்ப்பதற்கான திட்டம் இப்படி பல நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது.

முழு கட்டுரையைப் படிக்க →