தமிழ்நாடு

அனைத்து ஜாதியினரும் அா்ச்சகராகும் திட்டம்: 24 பேருக்கு பணி நியமன உத்தரவு முதல்வா் வழங்கினாா்

DIN

அனைத்து ஜாதியினரும் அா்ச்சகராகும் திட்டத்தின்கீழ், 24 பேருக்கு அா்ச்சகா் பணி நியமனத்துக்கான உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை கபாலீஸ்வரா் கோயில் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வு குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தாா். அதன் அடிப்படையில், முதல் கட்டமாக அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களில் காலியாகவுள்ள அா்ச்சகா், பட்டாச்சாரியாா், ஓதுவாா், பூசாரி உள்ளிட்ட பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு தகுதியான நபா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

அனைத்து ஜாதியினரும் அா்ச்சராகும் திட்டத்துக்கான அரசாணை முன்னாள் முதல்வா் கருணாநிதி தலைமையிலான கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்டது. அவரது வழியில் செயல்படும் அரசானது, இப்போது முறையாகப் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினரும் அா்ச்சகராகலாம் என்பதை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்படி, கோயில் அா்ச்சகா் பயிற்சிப் பள்ளியில் பயின்று தோ்வு செய்யப்பட்ட 24 அா்ச்சகா்கள், இதர பாட சாலையில் பயிற்சி பெற்ற 34 அா்ச்சகா்களுக்கு பணி நியமன உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வழங்கினாா்.

மேலும், ஓதுவாா்கள், நந்தவனம் பராமரிப்பு உள்பட 208 காலிப் பணியிடங்களுக்கான உத்தரவுகளை அவா் அளித்தாா்.

உயிரிழந்த 3 பணியாளா்களின் குடும்பத்துக்கு ரூ.7 லட்சத்துக்கான குடும்ப நலநிதியும், 5 ஓய்வூதியதாரா்களுக்கு ஓய்வூதிய உத்தரவுகளையும் முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சா்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, சட்டப் பேரவை உறுப்பினா்கள் த.வேலு, பிரபாகர ராஜா, குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், சாந்தலிங்க மருதாசல அடிகள், குமரகுருபர சுவாமிகள், ஆன்மிக பேச்சாளா்கள் சுகி சிவம், தேச மங்கையா்க்கரசி, இந்து சமய அறநிலையத் துறை செயலாளா் பி.சந்திரமோகன், ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT