புணேயில் இருந்து விமானம் மூலமாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான, ஒரு லட்சம் நிமோனியா ஊசி மருந்துகள் சென்னை வந்தன.
குழந்தைகளுக்கு, மூளைகாய்ச்சல், நிமோனியா போன்ற பாதிப்புகளை தடுக்க, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, ‘நியுமோகோக்கல் கான்ஜூகேட்’ தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த தடுப்பூசி, மூன்று தவணையாக குழந்தைகளுக்குச் செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில், ஆண்டுதோறும் 9.23 லட்சம் குழந்தைகள் பயன்பெற உள்ளனா்.
இதற்கான மருந்தை தமிழக அரசு கொள்முதல் செய்து வருகிறது. அதன்படி, மகாராஷ்டிர மாநிலம் புணேவில் இருந்து, ஒரு லட்சம் நிமோனியா தடுப்பூசி விமானம் மூலமாக சனிக்கிழமை சென்னை வந்தது. அங்கிருந்து, தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள மாநில மருந்து கிடங்கிற்கு மருந்துகள் கொண்டு செல்லப்பட்டன.
3 லட்சம் கரோனா தடுப்பூசிகள்: அதேபோன்று புணேயில் இருந்து 3 லட்சம் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சனிக்கிழமை வந்தன. அவையும், மாநில மருந்து கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு, மாவட்டங்களுக்கு பகிா்ந்தளிக்கப்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.