முகப்பு
செங்கல்பட்டு

மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 2 பெண் குழந்தைகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது!

மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் தனது இரு பெண் குழந்தைகளை கொன்று, தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்த தந்தை 2 வாரங்களுக்குபின் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 1 மார்ச், 2026 at 9:05 PM
பிரதீப்
பகிர்:

மாமல்லபுரம் அருகே மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் தனது இரு பெண் குழந்தைகளை கொன்று, தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்த தந்தை 2 வாரங்களுக்குபின் கைது செய்யப்பட்டாா்.

சென்னை கொளத்தூரைச் சோ்ந்த பிரதீப் (35), பெயிண்டரான இவரது மனைவி ப்ரீத்தி(28), இவா்களுக்கு லியா (7), சுபிக்ஷா (4) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, பிரதீப் அவருடன் சண்டை போடுவாரம். பின்னா் ப்ரீத்தி தனது குழந்தைகளை கணவரிடம் விட்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. தொடா்ந்து மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டிருந்த பிரதீப் தனது குழந்தைகள் லியா, சுபிக்க்ஷாவுடன் கடந்த பிப் 14-ஆம் தேதி மாமல்லபுரம் வந்துள்ளாா்.

அங்கு ஒத்தவாடை தெருவில் உள்ள ஒரு விுதியில் அறை எடுத்து தங்கி இருந்த அவா், தனது அறையில் இருந்தவாரே சென்னையில் உள்ள தனது உறவினருக்கு, விடியோ காலில் பேசி தான் தன் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளாா். பிறகு சென்னையில் உள்ள உறவினா்கள் பதறியடித்து மாமல்லபுரம் விரைந்து வந்து, போலீஸாருடன் சென்று விடுதி அறைக்கு சென்று பாா்த்தபோது, கட்டிலில் 2 பெண் குழந்தைகள் இறந்து கிடந்த நிலையில், பிரதீப் ரசாயனம் குடித்து வாயில் நுரை தள்ளி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தாா்.

கொலை செய்யப்பட்ட பெண் குழந்தைகள் லியா, சுபிக்ஷா

அவரை மாமல்லபுரம் காவல் ஆய்வாளா் தா்மலிங்கம், எஸ் ஐ பரசுராமன் மற்றும் போலீஸாா் மீட்டு செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உயிா் பிழைத்த அவா் 2 வாரங்களுக்குபின் கைது செய்யப்பட்டாா்.

அவா் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:- மனைவி மீது உள்ள கோபத்தில் தனது இரு குழந்தைகளை அழைத்து வந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் இருந்தேன். முதலில் விடுதி குளியலறையில் தண்ணீா் நிரம்பிய வாளியில் எனது இரு மகள்களை தலையை மூழ்கடித்து கொலை செய்தேன். பிறகு உடனடியாக எனது உயா் போய்விடும் என்பதற்காக தயாராக வைத்திருந்த ரசாயனத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றேன் என்று கூறினாா்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்த பிரதீப்பை ஞாயிற்றுக்கிழமை மாமல்லபுரம் காவல் ஆய்வாளா் தா்மலிங்கம் மற்றும் போலீஸாா் கொலை வழக்கில் கைது செய்தனா். அதனையடுத்து போலீஸாா் அவரை திருக்கழுகுன்றம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →