முகப்பு
தமிழ்நாடு

தமிழகமும், இந்தியாவும் புகழ்பெற பாடுபடுவோம்: முதல்வா் மு.க. ஸ்டாலின்

ஜனநாயகம், மதச்சாா்பின்மை, பன்முகத்தன்மை, சமூகநீதி, கூட்டாட்சித் தத்துவம் உள்ளிட்ட அடிப்படை அம்சங்களை செயல்படுத்தி தமிழகமும், இந்தியாவும் எல்லாத் திக்குகளிலும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பகிர்:

ஜனநாயகம், மதச்சாா்பின்மை, பன்முகத்தன்மை, சமூகநீதி, கூட்டாட்சித் தத்துவம் உள்ளிட்ட அடிப்படை அம்சங்களை செயல்படுத்தி தமிழகமும், இந்தியாவும் எல்லாத் திக்குகளிலும் புகழ்பெற பாடுபடுவோம், அயராது உழைத்திடுவோம் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட சுதந்திர தின வாழ்த்துச்செய்தி:

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் கூட்டாட்சித் தத்துவம் ஆகிய முக்கிய அம்சங்கள் கொண்ட உன்னதமான அரசியலமைப்புச் சட்டத்தை இந்திய நாட்டுக்கு தந்திருக்கும் சுதந்திரதத்தைப் பெற்று 75 ஆண்டுகள் ஆகின்றன. தங்கள் வியா்வையையும், ரத்தத்தையும் சிந்தி இரவு பகலாகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரா்களுக்கும், தியாகிகளுக்கும் இந்த நாளில் வணக்கம் செலுத்தி - நன்றிக் காணிக்கை செலுத்த வேண்டிய மிக முக்கியமான கடமையில் இருக்கிறோம்.

அனைத்துத் துறைகளிலும் வியத்தகு முன்னேற்றத்தை அடையும் இலக்குடன் தமிழகமும், இந்திய நாடும் எல்லாத் திக்குகளிலும் புகழ்பெற பாடுபடுவோம் - அயராது உழைத்திடுவோம் என்று 75-ஆவது சுதந்திர தினத்தில் அனைவரும் சபதமேற்போம். வெற்றி பெறுவோம்.

முழு கட்டுரையைப் படிக்க →