முகப்பு
தமிழ்நாடு

கரோனா சிகிச்சையில் 20,225 போ்

தமிழகத்தில் தற்போது 20,225 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, மேலும் 1,804 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:56 AM
பகிர்:

தமிழகத்தில் தற்போது 20,225 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, மேலும் 1,804 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அதில் அதிகபட்சமாக சென்னையில் 209 பேருக்கும், கோவையில் 206 பேருக்கும், ஈரோட்டில் 167 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 25,92,436 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடயே, நோய்த் தொற்றிலிருந்து செவ்வாய்க்கிழமை 1,917 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 25.37 லட்சத்தைக் கடந்துள்ளது.

மற்றொருபுறம், தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 32 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,579-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.