தமிழ்நாடு

சென்னையில் 49 இடங்களில் இலவச 'வை-பை' வசதி

DIN

சென்னை மாநகரில் 49 இடங்களில் வைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கம்பங்களில் மக்கள் இலவச வை-பை வசதியைப் பெறலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

சென்னை மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேம்பாலங்களுக்குக் கீழ் பூங்கா, சுவரொட்டிகள் அகற்றம், மரம் நடுதல் என பல பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. 

இத்திட்டத்தில் முக்கிய இடங்களை கண்காணித்தல், பேரிடர் மேலாண்மை மழை, வெள்ளப்பெருக்கு, கழிவுகள் அகற்றம் உள்ளிட்ட பல தகவல்களுக்காக ஸ்மார்ட் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன. ரிப்பன் மாளிகையில் இதற்கான கட்டுப்பாட்டு மையம் இயங்குகிறது. 

இந்நிலையில் சென்னை மாநகரில் 49 இடங்களில் ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கம்பங்களில் உள்ள ‘வை-பை’ வசதியை பொதுமக்கள் இலவசமாக 30 நிமிடங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்காக பயனர்கள் தங்கள் தொலைபேசி எண்ணை பதிவு செய்து ஒடிபி கொண்டு சரிபார்த்து பின்னர் சேவையைப் பெறலாம். 

மேலும், எந்தெந்த இடங்கள் ஸ்மார்ட் கம்பங்கள் உள்ளன என்பது குறித்த தகவல்களை https://chennaicorporation.gov.in/gcc/images/WiFiSmartPol.pdf என்ற தளத்தில் தெரிந்துகொள்ளலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT