தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பு குறித்து ஆக. 20ல் முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ்

DIN

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

கரோனா தொற்று குறைந்துள்ளதை அடுத்து, பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு கட்டங்களாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. இதனால் தமிழகத்திலும் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை செப்டம்பர் 1 முதல் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவழைக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. 

இந்நிலையில், செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா என்பது குறித்து வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேத்தி முடிவு செய்யப்படும் என அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார். 

இன்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடனான கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் இவ்வாறு கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT