தமிழ்நாடு

அண்ணாநகர் காவல் நிலையம் அருகே கொலை: ரௌடியை காட்டிக்கொடுத்ததால் விபரீதம்

DIN

அண்ணாநகர் பகுதியில் முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனத்தில் சென்றவரை கத்தியால் தாக்கி கொலை செய்த வழக்கில் ஒரு பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை, டி.பி.சத்திரம், 18வது குறுக்கு தெருவில் வசித்து வந்த சம்பத்குமார் அப்பகுதியில் தண்ணீர் கேன் சப்ளை செய்து வந்துள்ளார். சம்பத்குமார் நேற்று (18.8.2021) மாலை, அண்ணாநகர், 6வது அவென்யூ அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, சில நபர்கள் வழிமறித்து கத்தியால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். 
இது குறித்து தகவலறிந்த அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து, பிரேதத்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து சம்பத்குமாரின் மகன் கோபிநாத் என்பவர் கொடுத்த புகாரின்பேரில், அண்ணாநகர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 1.விநாயகம், இவரது மனைவி 2.கற்பகம், 3.மோகனவேல், 4.நவீன்குமார், 5.ஹரிகுமார் (எ) டோக்கா, 6.ஶ்ரீதரன் (எ) ஜங்குபார் ஆகிய 6 நபர்களை கைது செய்தனர். குற்றவாளிகளிடமிருந்து 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் இறந்துபோன சம்பத்குமார், பக்கத்து வீட்டில் வசிக்கும் விநாயகத்துடன் அவ்வப்போது தகராறு செய்துள்ளதும், ஒரு தடவை விநாயகத்தின் மகனை தாக்கியுள்ளதும், விநாயகத்தின் உறவினரான, காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் காவல் நிலைய குற்றப்பின்னணி உள்ள குற்றவாளி லெனின் என்பவர் விநாயகத்தின் வீட்டில் பதுங்கியிருந்தபோது, சம்பத்குமார் காவல்துறைக்கு தகவல் கொடுத்து லெனின் கைது செய்யப்பட்டுள்ளதும், இதனால் விநாயகத்திற்கும் சம்பத்குமாருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளதும் தெரியவந்தது.

 அதன்பேரில், விநாயகம், இவரது மனைவி கற்பகம், இவர்களது உறவினரான சரித்திர பதிவேடு குற்றவாளி லெனின் மற்றும் டி.பி.சத்திரம் பகுதியில் சம்பத்குமாரால் பாதிக்கப்பட்ட நபர்கள் சேர்ந்து திட்டமிட்டு, சம்பத்குமாரை கொலை செய்தது தெரியவந்தது.

மேலும், மேற்படி வழக்கில் தலைமறைவாகவுள்ள லெனின் மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க காவல் குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 6 குற்றவாளிகளும் விசாரணைக்குப் பின்னர், இன்று (19.8.20221) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை பயிர் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT