‘மாநில அரசு அனுப்பும் மொழியிலேயே மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்’: உயர்நீதிமன்றம்
மாநில அரசு அளிக்கும் மொழியிலேயே மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மாநில அரசு அளிக்கும் மொழியிலேயே மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
குரூப் பி, சி தேர்வுக்கு தமிழகத்தில் தேர்வு மையம் அமைக்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எழுதிய கடிதத்திற்கு மத்திய அரசு ஹிந்தியில் பதிலளித்துள்ளது.
இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதுரை எம்.பி. வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியது:
Advertisement
ஹிந்தியில் பதிலளிப்பது அரசியல் அமைப்பு சட்ட உரிமைகள் மற்றும் அலுவலக மொழியுரிமை சட்டங்களுக்கு முரணானதாகும். மாநில அரசு எந்த மொழியில் கடிதம் அனுப்புகிறதோ, அதே மொழியில் பதிலளிக்க வேண்டும்.
மத்திய அரசும் அதன் அலுவலர்களும் இந்திய அலுவல் மொழிச் சட்டத்தை பின்பற்ற வேண்டும் எனத் உத்தரவிட்டனர்.